News December 23, 2025
வீராங்கனைகள் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய BCCI

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கு BCCI சம்பள உயர்வு அறிவித்துள்ளது. அதன்படி, ODI பிளேயிங் 11 சீனியர்களுக்கு ஒரு நாள் போட்டி தொகை ₹20,000 to ₹50,000 ஆகவும், ரிசர்வ் சீனியர்களுக்கு ₹10,000 to ₹25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஜூனியர் பிளேயிங் 11 – ₹10,000 to ₹25,000, ரிசர்வ் ஜூனியர் – ₹5,000 to ₹12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டி20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.
News January 8, 2026
புன்னகை பூவாக மலரும் மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மிருணாள் தாகூர் மாறினார்.
அதுமட்டுமல்ல ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிருணாள். தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தால் அனைவரும் கவரும் அவர், இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். அதை மேலே Swipe செய்து அதை பாருங்க.
News January 8, 2026
8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.


