News December 23, 2025
திருச்சி காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் பண்டிகை அல்லது தொடர் விடுமுறை தினங்களில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும்
காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்வோரின் வீடுகள் Locked House பட்டியலில் சேர்க்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து காவலர்களால் கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 23, 2025
திருச்சி: ரூ.40,000 பறிமுதல், 4 பேர் மீது வழக்கு

மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன், ஜீவகுமார், ஜெயபாலன், ஜேசுராஜ் உள்ளிட்டோரை பிடித்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
News December 23, 2025
திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.