News December 22, 2025
அடுத்த 2 மணிநேரம் தூங்காதீங்க..

இந்தாண்டின் கடைசி வானியல் நிகழ்வான ‘உர்சிட் விண்கல் மழை’ பொழிவை இன்றிரவு வானில் காணலாம். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17 – 26 தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது. 8P/டட்டில் என்ற வால் நட்சத்திரம், சூரியனுக்கு அருகில் கடந்து செல்லும்போது, அது உருகி, நெருப்புக் கோள்களைப் போல பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்தியாவில் ஒளி மாசுபாடு இல்லாத தெளிவான வானில் இந்த அற்புதக் காட்சியை காண முடியும்.
Similar News
News December 30, 2025
ICC தரவரிசை பட்டியலில் ஷபாலி முன்னேற்றம்!

2025-ம் ஆண்டின் கடைசி மகளிர் டி20 தரவரிசை பட்டியலை ICC இன்று வெளியிட்டது. அதில் பேட்டர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மிருதி மந்தனா அதே 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஜெமிமா ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்திற்கு சென்றார். பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
News December 30, 2025
குழந்தைகளுக்கு கண்டிப்பா இத சொல்லிக்கொடுங்க!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டதா? நிதி & சேமிப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள் ➤அத்தியாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்களை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொடுங்கள் ➤வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ➤தேவையில்லாத கடன்களை வாங்குவதால் வரும் விளைவுகள் பற்றி கற்றுக்கொடுங்கள் ➤காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரையுங்கள். SHARE.
News December 30, 2025
பொருளாதார நிபுணர்களுடன் PM மோடி ஆலோசனை

2026-27-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி, FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக, நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் PM மோடி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், நிதிஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


