News April 30, 2024
டைட்டானிக்: தங்கக் கைக் கடிகாரம் ₹12 கோடிக்கு ஏலம்

1912இல் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணித்து உயிரிழந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட 15 காரட் தங்கக் கைக் கடிகாரம் ₹12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஜான் ஜேக்கப் ஆஸ்டர், மனைவியுடன் ஹனிமூன் சென்றுவிட்டு டைட்டானிக்கில் திரும்பியபோது கப்பல் விபத்துக்குள்ளானது. உயிரிழந்த அவர் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிகாரத்தை, ஜெர்மனியைச் சேர்ந்த மேரன் கிரென் ஏலத்தில் எடுத்துள்ளார்.
Similar News
News August 28, 2025
விடியல் எங்கே? அன்புமணி அடுக்கடுக்கான கேள்விகள்

2021 தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளின் நிலைமை குறித்து ‘விடியல் எங்கே’ என்ற பெயரில், அன்புமணி புத்தகம் வெளியிட்டார். தமிழ் அலுவல் மொழி வளர்ச்சி பிரிவு அமைப்பு, ஜெயலலிதா மரணம் மீதான விசாரணையில் தண்டனை பெற்றுத் தருதல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News August 28, 2025
ஊடகத் துறையினருக்கு விசா கட்டுப்பாடு விதித்த USA

வெளிநாட்டு ஊடகத் துறையினர், அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கு ‘I’ விசா வழங்கப்படுகிறது. இதன் கீழ் 240 நாள்கள் அங்கு இருக்க முடியும். இந்நிலையில், அந்நபரின் பணி ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே விசா காலம் நீட்டிக்கப்படுமாம். ஒருவேளை இதில் இருந்து அந்நபர் தவறினால், அவருக்கான விசா கால நீட்டிப்பை குடியுரிமை அதிகாரி வழங்க மறுப்பு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 28, 2025
வேலைவாய்ப்பில் தமிழ்நாடு நம்பர்-1

நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளின்படி, பெரிய மாநிலங்களான உ.பி., மகாராஷ்டிராவை விட அதிக (15%) பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அதேவேளை, குஜராத் 13%, மகாராஷ்டிரா 13% உ.பி., 8%, கர்நாடகா 6% பங்களிப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.