News December 22, 2025
நாமக்கல் விவசாயிகள் கவனத்திற்கு!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (டிச.23) செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு “மரவள்ளியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 28, 2025
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நாமக்கல்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டத்தை தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நாமக்கல் ஆட்சியர் பெயரில் போலி கணக்கு!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


