News December 22, 2025
கரூர் டவுன் பகுதிகளில் மின்தடை!

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மாவடியான் கோயில் தெரு, ராஜாஜி தெரு, ஆலமர தெரு, கச்சேரி பிள்ளையார் கோயில், சுங்க கேட், திருமாநிலையூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என உதவி செய்யப் பொறியாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
கரூர்: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

கரூர் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/-மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News December 28, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!

51 வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்காக கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவி ஷா.மதினா பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6வது முறையாக தமிழக அணிக்காக விளையாட உள்ளார். இவருக்கு கல்லூரி முதல்வர் நடேசன் மற்றும் செயலாளர் கண்ணன் ஆகியோரும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளும் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
News December 28, 2025
கரூர்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

கரூர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)


