News December 22, 2025

மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த திமுக திட்டம்!

image

மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். <<18640200>>கனிமொழி தலைமையில்<<>> திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் வழங்கப்படும் ₹1,000 உரிமைத்தொகையை ₹1,500 ஆக உயர்த்தலாம் என பேசப்பட்டதாக தெரிகிறது. 2021 தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ₹1,500 இடம் பெற்றிருந்தது.

Similar News

News January 8, 2026

பேசாத மரம் சொல்லும் வானக் கதைகள்.. VIRAL PHOTOS

image

குளிர்காலத்தின் அமைதியில், இலைகளை இழந்த மரம் தனியாக நிற்கிறது. அது நமக்கு மரமாக மட்டுமே தெரிந்தது. ஆனால், போட்டோகிராபர் எரிக் என்பவருக்கு கலை ஓவியத்தின் தொடக்க புள்ளியாக தெரிந்துள்ளது. ஒரு கிளையில் சூரிய அஸ்தமனத்தின் செம்மஞ்சள், இன்னொன்றில் மாலையின் நீலம், மற்றொன்றில் நட்சத்திர இரவின் அமைதி. காலம் நகர்வதை கிளைகளின் இடுக்கில் பொறுத்தி பேசாத மரத்தை, வானின் கதைகளை சுமக்கும் ஓவியமாக மாற்றிவிட்டார்.

News January 8, 2026

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய EX அமைச்சர்!

image

கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்க முடியாது, அங்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கே உள்ளது என KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்க்கு சம்மன் அனுப்பி தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணியில் மேலும் கட்சிகளை சேர்க்கும் பொருட்டு டெல்லியில் EPS முகாமிட்டுள்ள நிலையில், KTR-ன் விஜய்க்கு ஆதரவான பேச்சு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

News January 8, 2026

பொங்கல் பரிசு பணம்.. கடைசி நேரத்தில் கூடுதல் அறிவிப்பு

image

பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக கடைசி நேரத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய சர்குலர் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், *பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு, ₹3,000, வேட்டி, சேலை ஆகியவற்றை ஒரே தவணையில் விற்பனை முனையக் கருவி(POS) வாயிலாக வழங்க வேண்டும். *பொங்கல் பரிசு விநியோகிக்கும் போது ஆதார் விவரத்தை POS-ல் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!