News December 22, 2025
ALERT: குழந்தைகளின் ஆதாரை அப்டேட் செய்துவிட்டீர்களா?

குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்வது கட்டாயம் என UIDAI தெரிவித்துள்ளது. பள்ளி அட்மிஷன், அரசு திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க 5 -15 வயது குழந்தைகளின் கைரேகை, போட்டோக்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவை 2026 செப்டம்பர் 30 வரை இலவசம் என்றும் கூறியுள்ளது. எனவே, பெற்றோர்களே உடனே அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுங்கள்.
Similar News
News January 13, 2026
கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: TTV

NDA கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் <<18846855>>TTV <<>>இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் அமமுகவுக்கு எந்த அழுத்தமோ, தயக்கமோ, குழப்பமோ இல்லை என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உறுதிப்படுத்திய TTV, கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுப்பதாக பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News January 13, 2026
2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.
News January 13, 2026
தமிழ்நாட்டில் பொங்கல்.. பிற மாநிலங்களில் என்ன பெயர்?

இந்தியாவில், சூரியன் மகர ராசிக்குள் நுழைவதையும், அறுவடை திருநாளையும் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் கொண்டாடுகின்றனர். இது, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களிலும், மரபுகளிலும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.


