News December 22, 2025
ஒரு ஊரில் ஒருவர் மட்டும் வசிக்கும் விநோதம்

ஒரு ஊரில் ஒரே ஒருவர் அரசராகவும், மக்களாகவும் இருப்பதை கேட்கும் போது உங்களுக்கு விநோதமாக தோன்றலாம். ஆனால், US-ல் உள்ள மொனொவி என்ற இடத்தில் எல்சி எய்லர் (89) என்ற ஒரு பெண் மட்டுமே வசிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மேயர் தேர்தலில் அவரே போட்டியிட்டு, அவருக்கு அவரே ஓட்டு போட்டு மேயராகிறார். தன்னுடைய வரியையும் வசூல் செய்து, தன்னுடைய ஹோட்டலுக்கு தானே லைசென்ஸும் கொடுக்கிறார்.
Similar News
News January 1, 2026
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடி

2024 டிசம்பர் மாதத்தை விட இந்தாண்டு ஜிஎஸ்டி வசூல் 6.1% அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் ₹1.64 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2025 டிசம்பர் மாதம் ₹1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2025-26 நிதியாண்டில் ₹16.5 லட்சம் கோடி வசூலித்து, 8.6% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News January 1, 2026
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. தவெகவினர் எதிர்ப்பு

தவெகவில் பதவி கொடுக்கவில்லை என தூத்துக்குடி அஜிதா விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தற்கொலை முயற்சியும் செய்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திருப்பூர் சென்ற செங்கோட்டையனின் காரை மறித்து தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். வெளியூரில் இருந்து வந்தவருக்கு இளைஞர் அணி பதவி கொடுத்ததாக குற்றம்சாட்டிய அவர்கள், KAS-ன் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
News January 1, 2026
இனிமேல் மீன் சாப்பிட்டா முள் குத்தாது!

மீன் பிடிக்கும் என்றாலும், பலரும் அதை சாப்பிட யோசிப்பதற்கு காரணம் அதில் இருக்கும் முள்! அதிலும், சீனர்கள் சாப்பிடும் சில மீன் வகைகளில் சுமார் 80 முட்கள் இருக்குமாம். இதனால், முள் இல்லாத மீன்களை பண்ணைகளில் வளர்க்கும் முயற்சியில் 6 ஆண்டுகளாக போராடி வந்த சீன விஞ்ஞானிகள், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளனர். runx2b என்ற மீன்களின் ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதனை சாத்தியமாக்கியுள்ளனர்!


