News December 22, 2025
கையை கடிக்கும் செல்போன் ரீசார்ஜ்!

நமது 6-வது விரலாகவே செல்போன் மாறிவிட்டது. 4-6 பேர் கொண்ட குடும்பத்தில், செல்போன், Internet-க்கு சராசரியாக மாதம் ₹2000 வரை செலவாகிறது. நெட் பயன்படுத்தாத சில கிராமப்புற மக்கள் கூட மாதந்தோறும் மினிமம் ரீசார்ஜ் (₹200-₹300) செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் BANK, GAS உள்ளிட்ட OTP வரும். ₹30,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் 6% வரை இதற்கே செலவாகிறதாம். நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க?
Similar News
News January 26, 2026
உங்கள் உணவு இப்படியா வருகிறது?

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் டாக்டர்கள். மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவை.. SHARE IT
News January 26, 2026
தேர்தலில் பெண்களைதான் நம்பி இருக்கிறேன்: ஸ்டாலின்

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; அப்படி இருக்கையில், கூச்சமே இல்லாமல் ஏராளமான பொய்களை பிரதமர் சொல்லிவிட்டு சென்றுள்ளார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பெண்கள் கேட்காமலேயே, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திமுக ஆட்சி; பவர் ஹவுஸாக இருக்கும் பெண்களைதான் நம்பி இருக்கிறேன், தேர்தலில் முன்கள வீராங்கனைகளாக நின்று திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாக எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
News January 26, 2026
குடியரசு தின அணிவகுப்பில் பெண்களின் சாதனை

குடியரசு தின அணிவகுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் படிப்படியாக இடம்பெற தொடங்கி உள்ளனர். பெண்கள் அணிவகுப்பு நடத்தியது மட்டுமின்றி, சாகசங்களும் செய்து அசத்தினர். பெண்களின் அணிவகுப்பு நாட்டில் பெண்களுக்கான உரிமையை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது. எந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


