News December 22, 2025
அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்யனுமா?

மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை என <<18637464>>கன்னட நடிகர் சிவராஜ்குமார் <<>>பேசிய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் சூர்யா, லாரன்ஸ் போன்றோர் தங்களது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்வி, மருத்துவத்திற்கு உதவி வருகிறார்களே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News January 3, 2026
விஜய்க்கு தான் கெடுதல்: தமிழிசை

NDA கூட்டணியில் விஜய் சேர வேண்டுமென மீண்டும் ஒருமுறை தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். அனுமானங்களின் அடிப்படையிலேயே விஜய் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அனுபவம், ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கும் தங்களுடன்(NDA கூட்டணி) விஜய் சேர்ந்தால் நல்லது என்றும், இல்லையெனில் அது அவருக்கு தான் கெடுதல் எனவும் தமிழிசை கூறியுள்ளார். விஜய் வராவிட்டாலும் தங்களுக்கு பிரச்னையில்லை என அவர் குறிப்பிட்டார்.
News January 3, 2026
இறுதி ஆண்டு படிக்கும் போதே ₹2.5 கோடி சம்பளம்!

IIT ஹைதராபாத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ், இறுதி ஆண்டு படிக்கும் போதே ஆண்டுக்கு ₹2.5 கோடி சம்பளத்தில் வேலையை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் IIT ஹைதராபாத்தில் படித்து அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த மாணவர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச டிரேடிங் நிறுவனமான ‘Optiver’ இந்த ஆஃபரை வழங்கியுள்ளது. வரும் ஜூலையில் அவர் பணியில் சேர உள்ளார்.
News January 3, 2026
பதற்றத்திற்கு மத்தியில் IND vs BAN போட்டிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட IND vs BAN இடையிலான டி20 மற்றும் ODI தொடர், வரும் செப்டம்பரில் நடக்க உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 போட்டிகளை கொண்ட ODI தொடர் செப்டம்பர் 1, 3, 6-ம் தேதிகளிலும், டி20 தொடர் 9, 12, 13-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய அணி அந்த நாட்டிற்கு சென்று இந்த போட்டிகளில் விளையாட உள்ளது.


