News December 22, 2025

தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (41). இவர் நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக ஆதிநாராயணன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தென்கரை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News

News December 27, 2025

தேனி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

தேனியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

image

வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (27). இவர் சுரேஷ் என்பவரது காய்கறி கடையில் காய் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விருமாண்டி, இவரது நண்பர் பாண்டி செல்வம் ஆகியோர் மகாலட்சுமி வாங்கிய காய்கறிகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமிக்கு கேட்டதற்கு அவரை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தென்கரை போலீசார் விருமாண்டி, பாண்டிசெல்வத்தை கைது (டிச.26) செய்தனர்.

News December 27, 2025

தேனி: துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது!

image

போடி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (62). சூலப்புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (29). இவர்கள் இருவரும் நேற்று (டிச.26) போடி, கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து ஒரு நாட்டுதுப்பாக்கி, 2 தோட்டாக்கள், கத்தி, மண்வெட்டி, அரிவாள், டூவீலர், அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!