News December 22, 2025
BREAKING: காங்கேயத்தில் TVK நிர்வாகிகள் கைது

காங்கேயம் அருகே அனுமதி பெறாமல் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சென்ற போலீஸ் எஸ்.ஐயை மிரட்டல் விடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ், செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
திருப்பூர்: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும்.
News December 27, 2025
திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
தாராபுரம் அருகே விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை சிக்னல் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக கட்டுப்பாட்ட இறந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


