News December 22, 2025

நெல்லை: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி

image

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் கருங்குளம் எம்ஜிஆர் நகரில் உள்ள நாராயணன் மகன் கார்த்திக் என்பவர் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

நெல்லை: அரிவாளால் காதை வெட்டிய போலீஸ்

image

திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிள் டைசன் துரை(38) கிறிஸ்துமஸ் மதுவிருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சகலையான மெர்லின்(32) மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளார். மெர்லினின் நண்பர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுந்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மெர்லினுக்கு காதுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டைசன் துரை தலைமறைவாக உள்ளார்.

News December 27, 2025

நெல்லை: மதுபோதையால் நடந்த இரட்டை கொலை

image

திருநெல்வேலி, தச்சநல்லூர் கரையிருப்பில், ஆயுள் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையான மூக்கன்(52), தங்க கணபதி (50) மது அருந்தும்போது(டிச.20) இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டினார். இதற்கு பதிலடியாக அவரது சகோதரர் முத்துகுமரன் மூக்கனை தாக்கினார். GH-ல் அனுமதிக்கப்பட்ட மூக்கன்(டிச.21), தங்க கணபதி(டிச.26) உயிரிழந்தனர். போதை தகராறு இரட்டை கொலையாக முடிந்தது.

News December 27, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!