News December 22, 2025
BREAKING: அதிரடி கைது.. தமிழகத்தில் அடுத்த சர்ச்சை

இலங்கைக்கு ₹6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஆனந்தராஜ், முருகன் ஆகியோரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் விவகாரத்தை திமுக விமர்சித்து வருகிறது.
Similar News
News December 30, 2025
பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜன.5-ம் தேதி திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை (ஜன.15, 16, 17), குடியரசு தினம்( ஜன.26) என அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து வருகின்றன. மேலும், வார விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஜனவரியில் மொத்தம் 15 நாள்கள் விடுமுறையாகும். 2026-ம் ஆண்டில் மொத்தமாக 26 நாள்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 30, 2025
திமுக வாக்குறுதி.. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்!

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் திமுக தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக புதிய செயலியை (App) நாளை CM ஸ்டாலின் அறிமுகம் செய்யவுள்ளார்.
News December 30, 2025
மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு.. வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என <<18565227>>CM ஸ்டாலின்<<>> ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு வரு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, 1.30 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


