News December 22, 2025
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடுகள் அல்லது சேமிப்புகளுக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.
Similar News
News January 29, 2026
ஸ்டாலின் தொகுதி மாறலாம்: CTR நிர்மல் குமார்

திமுக கோட்டையாக இருந்த சென்னை, விஜய் கோட்டையாக மாறி 3 ஆண்டுகளாகிவிட்டதாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். CM ஸ்டாலினும், DCM உதயநிதியும் எப்போது வேண்டுமானாலும் தொகுதி மாறலாம் எனத் தெரிவித்த அவர், தவெகவிற்குத்தான் அதிக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 2021 தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
News January 29, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 29, தை 15 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 12:45 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 29, 2026
ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.


