News December 22, 2025

மதுரை: 12th முடித்தால் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

மதுரை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News December 27, 2025

மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 27, 2025

மதுரையில் ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துப்பாண்டி(25). இவரது மனைவி காயத்ரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி திருவேடகம் அருகில் செல்லும் வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

மதுரை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!