News December 22, 2025
சிவகங்கை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <
Similar News
News January 16, 2026
சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய பிரபல நடிகை

சிவகங்கையில், முன்னாள் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான நடிகை கௌதமி நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினார். இதில் சிவகங்கையில் உள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் நினைவிடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
News January 16, 2026
சிவகங்கை: கஞ்சா வைத்திருந்ததாக இருவர் கைது

பூவந்தி காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் ஸ்ரீதர், கே. பெத்தானேந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையை சேர்ந்த அரவிந்தன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆதீஸ்வரன் ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பிறகு அவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
News January 16, 2026
சிவகங்கை: வெள்ளியில் தயரான பொங்கல் பானை

தேவகோட்டையில் முருகானந்தம் என்பவர் தங்க நகை, வெள்ளி பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளி மூலம் சிறிய அளவிலான கலை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அவரது மகளுக்கு பரிசளிக்கும் நோக்கில் 12 கிராம் வெள்ளியில் பொங்கல் பானை, கரண்டி, கரும்பு, விறகுகள் தயாரித்து வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


