News April 30, 2024
அதிக ஐசிசி தொடர்களில் விளையாடிய இந்தியர்கள்

இந்தியாவுக்காக அதிகமுறை ஐசிசி தொடர்களில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 14 தொடர்களில் விளையாடியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மா 13, கோலி 12, சச்சின், ஹர்பஜன் தலா 11 தொடர்களில் விளையாடியுள்ளனர். நடைபெறும் டி20 WC தொடர் ரோஹித்துக்கு 14ஆவது தொடராகும்.
Similar News
News January 31, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 31, 2026
ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 31, 2026
விவேகானந்தர் பொன்மொழிகள்

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!


