News December 22, 2025
கரூர்: பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 23, 2025
கரூர்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
News December 23, 2025
குளித்தலையில் பெண் கடத்தல்? பரபரப்பு

குளித்தலை, நச்சலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (37). இவரின் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்த ரஞ்சித் அவரையும், அவரது கணவரையும் தாக்கி அவரது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 23, 2025
கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.


