News December 22, 2025

விஜய் கட்சியின் டெபாசிட் காலி: அர்ஜுன் சம்பத்

image

ஈரோட்டில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் படுதோல்வி அடைந்ததாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவின் Toolkit ஆக விஜய் செயல்படுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக ஒரு நடிகரை களமிறக்கும், அந்த வகையில் மற்றொரு மக்கள் நீதி மய்யமாக(கமல்) விஜய்யின் தவெக கட்சி இயங்குவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News December 31, 2025

6 மணி நேரத்தில் ₹2,000.. Incentive வாரி வழங்கும் நிறுவனங்கள்!

image

வேலை நேரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெலிவரி ஏஜெண்ட்கள் இன்று பந்த் அறிவித்துள்ளனர். ஆனால், புத்தாண்டு இரவில் ஆர்டர்கள் அதிகம் வரும் என்பதால், டெலிவரி நிறுவனங்கள் ஏஜெண்ட்களுக்கு Incentive அறிவித்துள்ளன. இன்று 6 PM – 12 AM வரை ஒவ்வொரு ஆர்டருக்கும் ₹120 – ₹150 என ஒரு நாளில் ₹3,000 வழங்குவதாக ZOMATO-வும், 6 மணி நேரத்திற்கு ₹2,000 வழங்குவதாக Swiggy-யும் தெரிவித்துள்ளன.

News December 31, 2025

பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி

image

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளே 3-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் & நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு அவற்றை ‘Emis’ தளத்தில் பதிவேற்றவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 31, 2025

உலக பேரழிவை ஏற்படுத்திய இந்த நாளை மறக்க முடியுமா?

image

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2019 டிச.31) சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத நிமோனியா தொற்றால் மக்கள் அதிகளவில் அட்மிட் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் கடல்கள், மலைகள், நாடுகளை தாண்டி அந்த தொற்று பரவியது. கோவிட்-19 என பெயர் பரிமாற்றம் பெற்று, உலகம் முழுவதும் எண்ணிலடங்கா உயிர்களை பறித்தது. #Remembering Disaster.

error: Content is protected !!