News December 22, 2025

திருப்பத்தூர்: 8 வயது சிறுமி விபத்தில் பலி!

image

ஜோலார்பேட்டை, எஸ்.கோடியூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் ஜோஷிகா (8) அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து சிறுமி சந்தைக்கோடியூரில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News January 12, 2026

திருப்பத்தூர்: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 12, 2026

திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

திருப்பத்தூரில் பினாயில் குடித்த சிறுவன்!

image

ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (17). இவரை நேற்று (ஜன.11) வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அஸ்வின் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!