News December 22, 2025

கள்ளக்குறிச்சியில் IT வேலை கனவா..? DONT MISS

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி நிறுவனங்களில் பணிபுரிவது உங்கள் கனவா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்திலேயே அரசு சார்பாக இலவச ‘AI Database Administrator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: வலிப்பு வந்ததால் ஆற்றில் மூழ்கிய நபர்!

image

கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணமூா்த்தி (45), மணலூர்பேட்டைக்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அந்த சமயம் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கினார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

FLASH: உளுந்தூர்பேட்டையில் 2 சடலங்கள் மீட்பு!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று (டிச.27) காலை 2 வாலிபர்களின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

கள்ளக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் இரவில் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: கரடிசித்தூரைச் சேர்ந்த சிரில் சலோனா (32), கிறிஸ்துமஸ் அன்று தனது வீட்டை பூட்டி விட்டு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 5.5 பவுன் நகை, ரூ.70,000 திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சலோனா, போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று கிறிஸ்துமஸ் இரவில் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!