News December 22, 2025

ஹாடியை சுட்டு கொன்றவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

image

பங்களாதேஷில் Inqilab Mancha அமைப்பின் தலைவர் ஹாடியை சுட்டுகொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஃபைசல் கரிமுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வேறு நாடுகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மசூத் இன்னும் பங்களாதேஷில் தான் ஒளிந்திருக்கிறார் என உளவுத்துறை கூறியுள்ளது. எனவே அவரை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Similar News

News January 12, 2026

தங்கம், வெள்ளி.. அதிரடியாக ₹12,000 விலை மாற்றம்

image

<<18833327>>தங்கம் போலவே<<>> வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விலையில் கிராமுக்கு ₹12 உயர்ந்து ₹287-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹2,87,000-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகைக்கு சீர் பொருள்கள் வாங்க நினைத்தவர்கள் தங்கம், வெள்ளி விலை உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News January 12, 2026

அண்ணா பெயரையே அழிக்கும் திமுக: EPS

image

மதுரை திருநகர் அறிஞர் அண்ணா பூங்கா என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, ஸ்டெம் பூங்கா என்று திமுக அரசு பெயர் வைத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை என்றும், தங்கள் கட்சியை நிறுவியவரின் பெயரையே அழிக்க நினைப்பது திமுகவின் கொடூர எண்ணமல்லவா எனவும் EPS விமர்சித்துள்ளார்.

News January 12, 2026

டெல்லியில் விஜய்.. என்ன நடக்கிறது!

image

டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம், CBI அதிகாரிகள் கரூரில் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே போல, ‘ஜனநாயகன்’ பட விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால், தவெக தொண்டர்களின் கவனம் டெல்லி பக்கம் திரும்பியுள்ளது.

error: Content is protected !!