News December 22, 2025

வேலூரில் இலவச தையல் பயிற்சி!

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்குப்8ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

வேலூர்:மது பாக்கெட் பதுக்கிய நபர் கைது!

image

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (35) வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது 90 மில்லி கொண்ட கர்நாடகா மாநில 20 பிராந்தி பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.

News December 29, 2025

வேலூர்: நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

image

காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவா கடந்த 27-ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட திலீப்குமார் (25), சதீஷ் (28) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்து, 6 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

News December 29, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிசம்பர் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!