News December 22, 2025
கிருஷ்ணகிரி: லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

ஓசூர்-பெங்களூரு சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. ஜங்ஷன் பகுதியில், லாரி மோதிய விபத்தில் ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.மேலும், லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் எல்நேஷ் மற்றும் சிவராம் ஆகிய 2பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
கிருஷ்ணகிரி: சொந்த வீடு கட்ட ஆசையா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!
News January 20, 2026
ஓசூர்: பெற்றோர் சொன்ன வார்த்தையால் இளைஞர் தற்கொலை

ஓசூர் அடுத்த மத்திகிரியில் நஞ்சபுரம் கிராமத்தை சேர்ந்த பகத்சிங் 26 என்பவர் முதலாம் ஆண்டு தொழில்நுட்ப கல்லூரி பயின்று வந்தார். பகத்சிங்க்கு தொடர்ந்து மது பழக்கம் இருந்ததால் அவருடை பெற்றோர் அவரை தீட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பகத்சிங் ஜன-19 இரவு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் ஜன-20 வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
கிருஷ்ணகிரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


