News December 22, 2025
தேங்காய் எண்ணெய் உறைகிறதா? இதோ தீர்வு

குளிர்காலத்தில், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம் என பாட்டிலை எடுத்தால் அது உறைந்து போய் இருக்கும். இதற்கு நீங்கள் எண்ணெய் பாட்டிலை கிச்சன் அடுப்பின் அருகில் வைக்கலாம். அங்கு சூடு தங்குவதால் எண்ணெய் உறையும் வாய்ப்பு குறைவு. அதேபோல, தேங்காய் எண்ணெயை Thermos பாட்டிலில் சேமியுங்கள். மேலும், தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து வைத்தால் அது உறைந்து போவதை தடுக்க முடியும்.
Similar News
News January 20, 2026
RCB அணியின் புதிய வரலாற்று சாதனை!

WPL தொடரில், தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை RCB அணி படைத்துள்ளது. 2025-ம் ஆண்டு சீசனில் தனது கடைசி போட்டியில் வென்றிருந்த RCB, 2026 சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று Play-off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி, கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே 2024-ல் RCB சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
பெர்லின் திரைப்பட விழாவில் இணைந்த 4-வது தமிழ்ப் படம்!

76-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் FORUM பிரிவில் இரா. கௌதமின் ‘சிக்கலான் குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து, இப்பிரிவில் தேர்வாகும் 4-வது திரைப்படம் இது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்கு தேர்வாவது இதுவே முதல்முறை.
News January 20, 2026
சற்றுமுன்: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

கூட்டணி முடிவை இறுதி செய்யாத IJK, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டது. இந்நிலையில், NDA கூட்டணியிலேயே தாங்கள் தொடர்வதாக IJK நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அழைப்பு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 6 சீட்கள் வரை கேட்டுள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.


