News December 22, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.23) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சோழதரம், ஒரத்தூர், ஒறையூர், பின்னலூர், நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழாம்பட்டு, வடக்குத்து, இந்திரா நகர், வடலூர், குறிஞ்சிப்பாடி, வளையமாதேவி, பு.ஆதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி மின்விநியோகம் இருக்காது.

Similar News

News December 24, 2025

கடலூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியை சேர்ந்தவர் திருமால் (32). இவரது மனைவி விஷ்ணுபிரியா (31). திருமால் கடலூர், செம்மண்டலத்தில் உறவினர் வீட்டில் தங்கி ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகமாகியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் டிச.26-ம் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

News December 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!