News December 22, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News January 12, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில் திருப்பூரில் நாளை (ஜன.13) திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டையுடன் நேரடியாகப் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 87606-06234 என்ற எண்ணை அழைக்கலாம்.

News January 12, 2026

திருப்பூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருப்பூர் மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

காங்கேயம் அருகே விபத்து: இளைஞர் பலி

image

கரூர், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கௌதம்(25). இவர் காங்கேயத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் படும்காயம் அடைந்த கௌதம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!