News December 22, 2025
கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!

கிருஷ்ணகிரி அம்மன் நகரில், தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவி விஜயலட்சுமியிடம் 51, முகமூடி அணிந்த மர்ம நபர் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். விஜயலட்சுமி கூச்சலிடுவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News December 26, 2025
கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..? DONT MISS

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (26.12.2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என்றும், மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 04343-291983 தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஓசூர் – கிருஷ்ணகிரி இடையே திட்டமிடப்பட்டுள்ள புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும் கிராமங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒன்னலவாடி, மொரனபள்ளி,தொரபள்ளி, காமன்தொட்டி, நல்லகொண்டபள்ளி, சாமனப்பள்ளி, சூளகிரி, சென்னபள்ளி, ஹொசஹல்லி, பிக்கனபள்ளி, பெல்லம்பள்ளி, குலியம், ஜிஞ்சுப்பள்ளி, பயனப்பள்ளி போன்ற 32 கிராமங்கள் வழியாக திருப்பத்தூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (25.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


