News April 30, 2024
மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தன. இந்த வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Similar News
News January 30, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

நேற்று (ஜன.29) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹9,520 உயர்ந்த நிலையில், இன்று (ஜன.30) தலைகீழாக குறைந்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ₹4,800, மாலையில் ₹2,800 என மொத்தம் ₹7,600 ஒரே நாளில் குறைந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதால், நாளையும் மிகப்பெரிய அளவில் தங்கம் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News January 30, 2026
BREAKING: H.ராஜா மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் H.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அவரின் உடல்நலம் குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
News January 30, 2026
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.


