News December 22, 2025

கள்ளக்குறிச்சி: இளம்பெண்கள் மீது மோதிய லாரி!

image

உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கண்டைனர் லாரி ஒன்றை கோபால் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, எதிரே டூவீலரில் வந்த பாலி கிராமத்தைச் சேர்ந்த ராணி (36), அவரது தோழி சவிதா (27) ஆகியோர் மீது லாரி மோதியதில் இருவரும் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

கள்ளக்குறிச்சி:இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 25, 2025

செயற்கை கால் பொருத்தும் முகாம் – துவக்கி வைத்த MP!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரிமாசங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று டிச 25, இந்த முகாமினை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கால்கள் இழந்த ஏராளமானோர் செயற்கைகால் பொருத்தி சென்றனர்.

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!