News December 22, 2025
செங்கல்பட்டு: 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சிங்கபெருமாள் கோவில் அருகே, கடந்த மாதம் ஆகாஷ் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முத்துவீரா, விக்கி, மாரியப்பன், கோபி மற்றும் சந்தோஷ் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், இதற்கான ஆணை நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழங்கினர்.
Similar News
News December 28, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாகசங்களில் ஈடுபடாமல் வாகனங்களை சரியாக இயக்க காவல்துறை அறிவிப்பு. நீங்கள் வாகனம் இயக்கும்போது உங்கள் வாகனத்திற்கும் உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு பொறுமை மிக அவசியம் என காவல்துறை அறிவிப்பு.
News December 28, 2025
செங்கை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
செங்கை: வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து!

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ், தனது உறவினர்கள் 18 பேருடன் வேனில் சென்னைக்குச் சுற்றுலா வந்தபோது, வண்டலூர் அருகே வல்லாஞ்சேரியில் பின்னால லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்து, ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ட்ரைவரை தேடி வருகின்றனர்.


