News December 22, 2025
சென்னை: காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை!

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜானிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன் நேற்று முன்தினம் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 22, 2025
சென்னை: டிகிரி முடித்தால் அரசு வேலை ரெடி- APPLY HERE!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
மெரினா கடற்கரையில் நீதிபதிகள் ஆய்வு

மொரினாவுக்கு “நீலக்கொடி” சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று மெரினாவில் ஆய்வு செய்தனர். அப்போது பிரச்னையில்லையெனில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், மாநில அரசு நீலக்கொடி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மெரினா கடற்கரையிலேயே நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்
News December 22, 2025
சென்னை: எமனாக மாறிய பொது கழிப்பறை!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கழிப்பறைக்கு அதேப்பகுதியை சேர்ந்த குடிநீர் வாரிய ஊழியர் முருகன் (58) நேற்று சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சைதாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


