News December 22, 2025
Piracy-ல் படம் பார்ப்பவர்களுக்கு வார்னிங்

டெலிகிராம், ஃப்ரீ வெப்சைட்டுகளில் Piracy-ல் படம் பார்ப்பவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இலவசமாக கிடைக்கிறது என அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள், ஆப்களில் பதிவிறக்கம் செய்தால், உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பல லட்சம் பேர் பயன்படுத்தும் ‘Pikashow’ செயலியும் பாதுகாப்பானது இல்லை என்றும் கூறியுள்ளது.
Similar News
News January 16, 2026
டூரிஸ்ட் பேமிலி, பைசனுக்கு சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளமான ‘லெட்டர்பாக்ஸ்ட்’, ஆண்டுதோறும் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான டாப் 10 ஆக்ஷன் படங்களின் வரிசையில் 5-வது இடத்தில் ‘பைசன்’ படமும், டாப் 10 காமெடி படங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் தமிழ் சினிமா கவனிக்கப்படுவதற்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.
News January 16, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


