News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.
Similar News
News December 29, 2025
நீலகிரி: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

நீலகிரி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<
News December 29, 2025
ஊட்டியில் மாற்றம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் மக்களின் வசதியை அதிகரிக்கும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.பொது மக்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட
அலுவலக நேர சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
நீலகிரியில் அழியும் அபாயம்!

நீலகிரியில் பரவலாக காணப்பட்ட அரிய வகை கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை, கூடலுார் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இதன் இறைச்சி, மருத்துவ குணம் கொண்டதாக கூறி, வேட்டையாடி வருவதாலும், காடுகள் அழிக்கபட்டதாலும், இங்கும் இதன் எண்ணிக்கை குறைந்து இனமே அழியும் அபாயத்தில் உள்ளது என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


