News December 22, 2025
தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News December 23, 2025
தஞ்சை: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சரபோஜிராஜபுரம் கிராம எல்லைக்கு உட்பட்ட ரயில்வே கேட் அருகில் அய்யம்பேட்டை பண்டாரவாடை இடையில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசன்ஜர் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த போலீசார், யார் இவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.