News December 22, 2025
புதுச்சேரி: கோயில் சென்றவரை தாக்கியவர் மீது வழக்கு

முருங்கபாக்கம் பகுதியை சேர்ந்த கிருபா (45), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் யுவராஜ் என்பவர் அவரை சம்பந்தமில்லாமல் திட்டி, ஓங்கி அறைந்துள்ளார். இதில் கிருபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் யுவராஜை தேடி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News December 22, 2025
புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, நேற்று (டிச.21) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, எஸ்.பி சுருதி தலைமையிலான போலீசார் தனியார் ஓட்டலுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய் ‘டோனி’ உதவியுடன் ஓட்டலின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
News December 22, 2025
புதுவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….


