News April 30, 2024

T20 இந்திய அணியில் மீண்டும் ரோஹித், விராட் கோலி

image

T20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி ஜோடி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததால், 2 பேரும் T20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். குறிப்பாக, கோலி களமிறக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவதைக் கவனத்தில் கொண்டு 2024 உலகக் கோப்பை அணியில் 2 பேரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Similar News

News August 28, 2025

எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்

image

*கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை
*புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்
*உள்ளத்தில் உள்ள லட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட வேண்டும்
*நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்
*சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது, நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

News August 28, 2025

No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

image

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?

News August 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

error: Content is protected !!