News December 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.
Similar News
News December 27, 2025
ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
பெருந்துறை அருகே சோகம்: டெய்லர் பலி

பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு, 59; இப்பகுதியில் ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் டைலராக வேலை செய்தார். நேற்று வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!


