News December 22, 2025

சென்னை – தொடர் விடுமுறை பேருந்து கட்டணங்கள் உயர்வு

image

கிறிஸ்மஸ் (ம) புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணங்கள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளன. திருநெல்வேலி (₹2000–₹4500), கோயம்புத்தூர் (₹3000–₹5000), மதுரை (₹4000 வரை), நாகர்கோவில் (₹4000 வரை), திருச்சி (₹3600 வரை) விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் நாளை டிச.23 ஆம் தேதியுடன் தேர்வுகளும் முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 5, 2026

சென்னையில் மின் பிரச்னையா? நாளை மிஸ் பண்ணிராதீங்க!

image

சென்னையில் மின்­நு­கர்­வோர் குறை­தீர் கூட்டம் ஜன­வரி 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நடை­பெ­றும் என தமிழ்­நாடு மின்பகிர்மா­னக் கழ­கம் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மயிலாப்பூர் கோட்­டம், தண்­ டை­யார்­பேட்டை கோட்டம், அம்­பத்­தூர் கோட்­டம் மற்றும் கே.கே.நகர் கோட் டம் ஆகிய கோட்­டங்­க­ளில் இந்த மின்­நு­கர்­வோர் குறை­தீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

சென்னையில் மனதை உலுக்கும் கொடூரம்

image

சென்னை கொளத்தூர் பகுதியில் சைக்கிளை பழுது பார்க்க 14 வயது சிறுவன் சென்றுள்ளான். சிறுவனிடம் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அலறி அடித்து வீட்டுக்கு ஓடிவந்த சிறுவன் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கடைக்காரர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 5, 2026

JUST IN: சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி

image

சென்னை நெற்குன்றத்தில் சிலம்பரசன் என்ற நபர் கல்லூரி மாணவி ஒருவரை 3 மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதையில் இருந்த அவர், இன்று காலை காயப்போட துணியை எடுக்க சென்ற மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயற்சித்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!