News December 21, 2025

ஒளவையார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு 31.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். தேர்வானோருக்கு ரூ.1.50 லட்சம், பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in தளத்தில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Similar News

News January 16, 2026

சென்னை: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

சென்னையில் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 16, 2026

சென்னை: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

image

சென்னையில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<> RTO அலுவகத்தில்<<>> புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!