News December 21, 2025

திருவாரூரில் ஏர்போர்ட் அமைக்க எம்பி வலியுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக் வேண்டும் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் ஏர்போர்ட் அமைத்தால் டூரிஸ்ட் பகுதிகளான வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக அமையும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

Similar News

News December 27, 2025

திருவாரூர்: விபத்தில் சிக்கிய வேன்-19 பேர் காயம்

image

முத்துப்பேட்டை, கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற டூரிஸ்ட் வேன் அங்குள்ள ரவுண்டானாவின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 6 பெண்கள், 8 ஆண்கள், 5 குழந்தைகள் உட்பட 19 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

திருவாரூர்: ஆட்சியர் நிதியுதவி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், 01.11.2025க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறித்தவப் பயனாளிகளிடமிருந்து, 550 பேருக்கு ரூ.37,000, 50 கன்னியாஸ்திரீகளுக்கு ரூ.60,000 மானியத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை பிறருக்கும் ஷேர் பண்ணுங்க…

News December 27, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!