News December 21, 2025
போராட்டத்தில் ஈடுபட்ட 35 விவசாயிகள் மீது வழக்கு

கடலூர் அடுத்த கொடுக்கன்பாளையம், மலைஅடிகுப்பம் ஊராட்சியில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று தொடங்கினர். இந்நிலையில் இன்று (டிச.21) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடலூர் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.1.2026 வரை நடைபெறுகிறது. இதில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3 லட்சம் கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News December 25, 2025
கடலூர்: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

1.கடலூர்- 04142-295101
2.சேத்தியாத்தோப்பு- 04144-244366
3.சிதம்பரம்-04144-238099
4.காட்டுமன்னார்கோவில்- 04144-262101
5.குறிஞ்சிப்பாடி- 04142-258370
6.பண்ருட்டி-04142-242100
7.திட்டக்குடி- 04143-255208
8.ஸ்ரீமுஷ்ணம்- 04144-245201
9.வேப்பூர்- 04143-241229
10.விருத்தாசலம்- 04143-238701
11.கடலூர் SIPCOT-04142-239242
12.நெல்லிக்குப்பம்- 04142-272399
13.குமாராட்சி – 04144-296201. SHARE பண்ணுங்க.
News December 25, 2025
கடலூர்: ரூ.3 லட்சம்; அறிவித்தார் CM ஸ்டாலின்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் நேற்று பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


