News December 21, 2025
பிளிஃப் மாடல் மொபைல் வெறும் ₹40,000 தானா?

இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய AI+ நிறுவனம், அடுத்த அதிரடியாக மிக குறைந்த விலையில் பிளிஃப் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ’Nova Flip’ என பெயரிடப்பட்ட இந்த மொபைல் ₹40,000 என்ற விலையில் 2026-ல் விற்பனைக்கு வருகிறது. ஏற்கெனவே சந்தையில் உள்ள பிளிஃப் மாடல் ஸ்மார்ட் போன்கள் ₹80K முதல் ₹1.20L வரை விற்கும் நிலையில், குறைந்த விலையில் சந்தைக்கு வருகிறது Nova Flip.
Similar News
News December 26, 2025
வார்னரின் சாதனையை சமன் செய்த ரோஹித்

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே டிராபியில் விளையாடிய ரோஹித் சர்மா, முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். 155 ரன்கள் குவித்த ரோஹித், லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிக முறை 150+ ரன்கள் எடுத்த வீரர் என்ற டேவிட் வார்னரின்(9) சாதனையை சமன் செய்தார். மேலும், அனுஸ்டுப் மஜும்தாருக்கு(39) பிறகு, விஜய் ஹசாரேவில் சதமடித்த அதிக வயதான வீரர் என்ற பெருமையை ரோஹித் (38 ஆண்டு 238 நாள்) பெற்றார்.
News December 26, 2025
ராசி பலன்கள் (26.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 26, 2025
AI வந்தாலும் மனிதர்களின் தேவை இருக்கும்: IT செயலாளர்

AI-ஆல் வேலை இழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கும் என IT செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் white-collar வேலைகள் குறைவு. அதேபோல், அறிவியல், டெக்னாலாஜி, இன்ஜினியரிங், மருத்துவ துறைகளில் அதிக white-collar வேலைகள் இருப்பதால், புது வாய்ப்புகள் பெருகும். மேலும், AI செய்யும் வேலைகளை மேற்பார்வையிட மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


