News December 21, 2025
விருதுநகரில் திமுக மாநாடு அறிவிப்பு

தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் ஜன.24 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்ய உள்ளார். ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு போட்டியாக இந்த மாநாடு அமையும் என திமுக வினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
விருதுநகர்: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

விருதுநகர் மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News December 26, 2025
விருதுநகர் அருகே பாட்டி, பேரனுக்கு வெட்டு

விருதுநகர் சூலக்கரை அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் முருகானந்தம், 48. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மது போதையில் அவ்வழியாக வந்த 10ம் வகுப்பு மாணவரை வழிமறித்து கத்தியால் தாக்கினார். அதை தடுக்கச் சென்ற மாணவரின் பாட்டி ராஜலட்சுமியையும் 65, கத்தியால் வெட்டினார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.
News December 26, 2025
விருதுநகர்: மனைவி பிரிவால் கணவர் எடுத்த விபரீத முடிவு

விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 35, செல்வராணி தம்பதியினர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரணமாக மனைவி தனது மகனுடன் தனியாக சென்று விட்டார். இதன்பின் தாயாரும் இறந்ததால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தந்தையுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உணவருந்தி விட்டு துாங்கச் செல்வதாக வீட்டின் மாடிக்குச் சென்றவர் மனைவியின் சேலையில் துாக்கிட்டு இறந்தார்.


