News April 30, 2024
கடன் தொகை வழங்கிய பிறகே வட்டியைக் கணக்கிட வேண்டும்

வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளில் இருந்து, கடனுக்கான வட்டியைக் கணக்கிடக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறதோ, அந்த நாளில் இருந்துதான் கடனுக்கான வட்டியைக் கணக்கிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வங்கிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Similar News
News March 23, 2026
தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
News March 23, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுகட்டாக பணம் பரிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.