News December 21, 2025

காஞ்சிபுரம்: சொந்த ஊரிலேயே சூப்பர் வேலை!

image

காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் துணை செவிலியர், ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர், லிப்ட் மெகானிக், ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர், ரத்த வங்கி ஆலோசகர், செவிலியர், ரேடியோகிரப்பர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். டிச.25-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 23, 2025

காஞ்சிபுரம்: தம்பியுடன் தகாத உறவு! ; குழந்தை பலி

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2ஆவது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

காஞ்சிபுரம்: பைக் விபத்தில் இருவர் பலி!

image

கொட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம்(24). நேற்று முன் தினம் வழக்கம் போல் பணி முடிண்டு பைக்கில் திரும்பிய போது, பெரிய கரும்பூர் ரயில்வே கேட் அருகே, எதிரே வந்த பைக் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், சந்தானமும் எதிரே வந்த திருத்தணியைச் சேர்ந்த மோகன் என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மோகன் பைக்கில் அமர்ந்து வந்த சந்தியா(23), மீனா(30) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

News December 23, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.23) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!