News December 21, 2025

ரஷ்ய போர்க்களத்தில் இந்தியர்கள் 26 பேர் பலி

image

‘நல்ல வேலை கிடைக்கும்’ என்ற கனவோடு ரஷ்யா சென்ற 202 இந்திய இளைஞர்கள், எதிர்பாராத விதமாக உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் தள்ளப்பட்ட அதிர்ச்சி தகவலை MEA வெளியிட்டுள்ளது. போரில் இதுவரை, 26 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 7 பேரை காணவில்லை என்றும் தெரித்துள்ளது. மத்திய அரசின் முயற்சியால் 119 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 50 பேரை விடுவிக்க ரஷ்யாவுடன் பேசி வருதாக MEA கூறியுள்ளது.

Similar News

News December 25, 2025

விஜய்யை எதிர்க்க உதயநிதியின் பிளான் இதுவா?

image

விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு தேர்தலில் இளைஞர்களை களமிறக்கும் கட்டாயம் திமுகவுக்கும் வந்துள்ளது. இதனால் இளைஞரணியில் ஆக்டிவாக இருக்கும் 40 பேரை தேர்வு செய்த உதயநிதி, அவர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டாராம். மீட்டிங் முடிந்தவுடன், அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய OFFICIAL தகவல் விரைவில் வெளியாகலாம்.

News December 25, 2025

வசீகரமான மார்கழி கோலங்கள்!

image

மார்கழி அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடுவதால், தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றலும், ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் தீய சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாசலை அலங்கரிக்கும் சில ஸ்பெஷலான மார்கழி கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்த்து, வீட்டு வாசலில் முயற்சிக்கவும்.

News December 25, 2025

விஜய் + ஓபிஎஸ் + டிடிவி கூட்டணி.. முடிவு இறுதியானது

image

NDA-வில் இருந்து பிரிந்த TTV, OPS தரப்பு இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என OPS கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விரைவில் OPS நல்ல முடிவை எடுப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளார். அத்துடன், அமமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் TVK + OPS + TTV கூட்டணி உறுதியாகும் என கூறுகின்றனர்.

error: Content is protected !!