News December 21, 2025
காஞ்சிபுரம்: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
காஞ்சி: மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்!

உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் வசிப்பவர் அசோக்(20). இவர், 65 வயது மூதாட்டியின் விவசாய நிலத்தில் நெல் மூட்டைகளை அடுக்குவதற்காக சென்றார். அப்போது அந்த மூதாட்டியிடம் ’உல்லாசமாக இருக்கலாம்..’ என அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
News December 25, 2025
காஞ்சிபுரம்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

தைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(டிச.24) அதே கிராமத்தில் உள்ள ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் வேலை செய்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 25, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 24) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


